📣 📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️May 23,2020🗓️
🔒Lockdown Count : Day 6️⃣0️⃣/68
🌡️வெப்பநிலை🌪️
🌞39°C⬆️ ❄27°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 75.54(↔️)
🚚DIESEL - 68.22(↔️)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
◼️சென்னையைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட தொடங்கின. ஓட்டுநர், 1 பயணி மட்டும் பயணிக்கும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதி
◼️கொரோனா ஊரடங்கால் அனைத்து குடும்பங்களுக்கும் 10 மாதங்களுக்கு ரூ7,500 நிதி உதவியை மத்திய அரசு நேரடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற 22 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
◼️மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லம் நினைவு இல்லமாக மாறுகிறது.
◼️'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், பயோ-மெட்ரிக் மற்றும் நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் மின்னணு உள்ளிட்ட அனைத்து கருவிகளையும் இணைக்கும் பணிகள் வரும் செப்டம்பரில் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.
◼️மத்திய அரசின் 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு என்பது சலுகை அல்ல, அது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என்று வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
◼️திண்டுக்கல்லில் 2 மாதங்களுக்குப் பின் தற்காலிக பூ மார்க்கெட் செயல்படத் தொடங்கியது
◼️ரமலான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில் 2 மணி நேரம் தொழுகை நடத்த அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
◼️சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பதவிக்காலம் மே 27-இல் முடிவடையவுள்ளதால் நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள உயா்கல்வித்துறைச் செயலா் அபூா்வா தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
◼️சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.
◼️வெளிநாடுகளில் தவித்து வரும் 'வெளிநாடுவாழ் இந்திய குடிமகன்' (ஓசிஐ) அட்டை வைத்திருப்பவா்கள், இந்தியாவுக்கு வருவதற்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
◼️சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பறக்க தயாராக உள்ளன. விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
◼️சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, பெரம்பலுார், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று வெப்ப அலையுடன் கூடிய காற்று வீசும்.தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் துாத்துக்குடி ஆகிய, 10 மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்
🌏உலகச்செய்திகள்
◼️பாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற சா்வதேச பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்தவா்கள், குடியிருப்புவாசிகள் என 66 போ உயிரிழந்தனா்.
◼️இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லை விவகாரங்களில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
◼️பேஸ்புக்கின் 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
◼️ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 84 பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த பாதிப்புடன் சேர்ந்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,448 ஆக உயர்ந்துள்ளது.
◼️ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கொரோனா தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த ஐபிஎல் தொடரை குறித்த நேரத்தில் நடத்த முடியாது என்பதால், அத்தொடரை ஒத்திவைக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment